2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

குடிநீர்த் திட்டம் பாதுகாப்பாக இல்லை

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

“கிளிநொச்சி, அக்கராயனில் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர்த் திட்டத்தில், மாவட்டச் செயலாளர் தொடர்புபட்டிருக்க வேண்டும்” என, இப்பகுதி பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், அக்கராயனில் குடிநீர்த் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இக்குடிநீர்த் திட்டத்தில் குழாய் பொருத்துதல், நீர் விநியோகம் என்பவற்றில் பல்வேறு குறைபாடுகளும் நிதிமோசடிகளும் இடம்பெற்று இருப்பதாக, இப்பகுதி பொது மக்களால், குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்திய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, தகுந்த பதிலை அளிக்கவில்லை.

இதேவேளை, இக்குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கென உருவாக்கப்பட்டுள்ள நிர்வாகம் மந்தகதியில் இயங்கி வருவதாகவும் ஏற்கெனவே பாதுகாப்பற்ற முறையில் குரங்குகள், பறவைகளின் எச்சம் நீருடன் கலப்பதினால் பாதுகாப்பான நீராக மாற்றுமாறு தொடர்ச்சியாக பொது அமைப்புகள் வேண்டி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .