2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குடிபோதையில் அட்டகாசம்: ஆசிரியர்களுக்குப் பிணை

Thipaan   / 2015 நவம்பர் 07 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

நெடுங்கேணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் குடிபோதையில் அட்டகாசம் புரிந்த நிலையில், நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த பாடசாலையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப் பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

இந் நிலையில் காலையில் பாடசாலைக்குச் சென்ற அதிபர், பாடசாலையில் நடந்த சம்பவங்களை பார்வையிட்டதுடன் காவலாளியினால் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அதிபரினால் வலய கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவரால் உத்திரவிடப்பட்டதையடுத்து, அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந் நிலையில் பொலிஸாரினால் விடுதியில் தங்கியிருந்த 6 ஆசிரியர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நேற்று (06) வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு 6 ஆசிரியர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவ் ஆசிரியர்களை வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளரே பிணையில் எடுப்பதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வலய கல்விப்பணிப்பாளாரிடம் கேட்டபோது ஆசிரியர்களை பிணையில் எடுப்பதற்கு கையொப்பத்தை தான் இடவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுவதால் வட மாகாண கல்வி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஆவண செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .