2025 ஜூலை 16, புதன்கிழமை

குடமுருட்டிக் குளத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு

George   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி குடமுருட்டிக் குளத்தின் அணைக்கட்டின் ஒரு இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் குழு, குளத்தின் அணைக்கட்டுக்குச் சென்று, நீர்க்கசிவினைத் தடுப்பது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, “குடமுருட்டிக் குளத்தின் அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் பணிகள் முழுமையாக நிறைவுச்  செய்யப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட ​வேண்டும்” என   இக்கிராமத்தின் விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X