2025 ஜூலை 16, புதன்கிழமை

காடழிப்பு தொடர்கிறது

George   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்ச, பூநகரி நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முக்கொம்பன், நேரடம்பன் கிராமங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்பட்டு, வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

2010ம் ஆண்டுக்குப் பின்னர், தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்துள்ள நிலையில் முக்கொம்பன், ஜெயபுரம், கரியாலைநாகபடுவான், அரசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் மரங்கள் வெட்டக்கூடாது என்ற தீர்மானம், பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளன.

எனினும், “இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதுடன்,  பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் மரங்களை வெட்டுபவர்களுக்கு உதவிசெய்கின்றனர்” என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X