2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காணாமல் போனோரின் உறவுகளுடன் சுமந்திரன் எம்.பி, நாளை சந்திப்பு

George   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, நாளை சனிக்கிழமை (17) மாலை 2.30 மணிக்கு முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கரைச்சிக்குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த  31.06.2016 அன்று இடம்பெற்ற சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

அதன்போது,  'காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது, காணாமல் போனோர் அலுவலகமும் அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,; விளக்கம் தரவேண்டும்' என பாதிக்கப்பட்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சுமந்திரன் எம்.பியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்திருந்தார்.

அதன்படி,  இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .