2025 ஜூலை 16, புதன்கிழமை

காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

George   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில்  முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாமந்தி வீரசிங்க மற்றும் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள்  தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X