2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காணி, வீதிகள் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் உள்ள  காணி மற்றும் வீதிகள் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், பொதுக்காணிகள், அரசகாணிகள் தொடர்பாகவும் அவற்றினுடைய பயன்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொது அமைப்புக்களின் காணி கோரிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வீதிகளின் அபிவிருத்தி, வீதிகள் தொடர்பாகவும் புணரமைக்கப்படவேண்டியுள்ள வீதிகள் தொடர்பாகவும் இந்தக்கலந்தரை புனரமைக்கப்பட்ட, புணரமைக்கப்படாத வீதிகள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாகணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .