2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குமரபுரம் பாலம் அமைக்கப்படுகிறது

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணிஜயம் பாஸ்கரன்

கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்துக்குட்பட்ட  குமரபுரம் கால் ஏக்கர் திட்டத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்துக்குட்பட்ட குமரபுரம் கால் ஏக்கர் திட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியில் காணப்பட்ட குறித்த பாலம் சேதமடைந்து காணப்பட்டதுடன் கடந்த மே மாதம் பெய்த மழையினால் பாலம் முற்றாக சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களால் குறித்த பாலம் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

தற்போது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இபாட் திட்டத்தின் கீழ் குறித்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .