2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குருதிக்கொடை நிகழ்வும் மருத்துவமுகாமும்

Niroshini   / 2016 மே 30 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்று புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் குருதிக்கொடை நிகழ்வும் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

இதில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பாடசாலையின் பழைய மாணவருமான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், உளநல மருத்துவருமான வைத்தியர் சி.சுதாகரன், வடக்கு கல்வி வலய ஓமந்தை கோட்டக்கல்வி அதிகாரி தா.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர்,

பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவ்வாறான சமூகபணியொன்றினை ஒழுங்கு செய்தமைக்காக பாடசாலை பழைய மாணவர் சங்கத்துக்கும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு பாராட்டுதல்களை தெரிவித்தார்.

அத்தோடு இலங்கையின் சுகாதார துறை ஏனைய தென்கிழக்காசிய நாடுகளின் ஒப்பிடுகையில் தாரான சேவையை வழங்கி வருவதாகவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தினாலும் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறாக தொற்றாத நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு தொழிநுட்பசாதனங்களின் அதிகூடியபாவனையும் காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன்,

இன்று இலங்கையில் அதிகளவிலான மரணங்கள் தொற்றா நோய்களின் தாக்கத்தினாலும் விபத்துக்களினாலும் நடைபெறுவதாக புள்ளிவிபங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மூன்றில் இரண்டு மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும் இவ்வாறான மருத்துவ முகாம்களை கிராமங்களில் நடாத்துவதானது பாராட்டப்படவேண்டியதொன்றாகும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .