Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஷ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயனில் இரு வீதிகளின் புனரமைப்புப் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன.
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 427 மில்லியன் ரூபாய் செலவில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோணாவில் பாடசாலையிலிருந்து யூனியன்குளம் வழியாக அக்கராயன் பிள்ளையார் கோவில் வரையான 6 கிலோமீற்றர் வீதியும் அக்கராயன் வைத்தியசாலைக்கு அருகிலிருந்து அணைக்கட்டு வீதி வழியாக ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் வரையான 7 கிலோமீற்றர் வீதியும் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரு மாதங்களாக இப்புனரமைப்புப் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மேற்கின் முக்கிய உப நகரமான அக்கராயனில் இரு வீதிகள் புனரமைக்கப்படுகின்றமை மீளக்குடியமர்ந்துள்ள இப்பிரதேச மக்களுக்கு பெரும் நன்மையளிப்பதாக அமையவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago