2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிளிநொச்சி பொதுச் சந்தைத் தீ: தடயவியல் அதிகாரிகள் விரைவு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி  பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கைகள், கொழும்பிலிருந்து நேற்றுப் புதன்கிழமை வருகை தந்த விசேட தடயவியல்  பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காலை 10.30க்கு குறித்த பகுதிக்கு வருகை தந்த பகுப்பாய்வுக் குழுவினர், தீ விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு, கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 125 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 100 கடைகள் முற்றாக எரிந்ததோடு, ஏனையவை பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், விபத்துக்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் தற்போது பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன்,  தீ விபத்து வெள்ளிக்கிழமை  ஏற்பட்டுள்ளமையால், குறித்த தினத்தில் கடைகளில் விளக்கு வைத்து வழிபடுவது வழக்கம். அதன்காரணமாகவா அல்லது மின்னொழுக்கினாலா அல்லது  யாரும் தீவைத்தார்களா, என பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .