2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் தின நிகழ்வு

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சர்வதேச வாக்காளர் தின நிகழ்வுகளின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வுகள் எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர்கள் எஸ்.ரத்னஜீவன், எச்.ஹீல் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

காலை 9 மணிக்கு டிப்போ சந்தியிலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி, கூட்டுறவாளர் மண்டபம் வரை செல்லும்.

பாடசாலை மட்டத்தில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பேச்சு, கவிதை ஆகிய நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. தேர்தல் குறித்த வினாடி வினாப் போட்டி, விழிப்புணர்வு நாடகம் ஆகியவனவும் நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .