Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 07 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
‘‘கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலைகளுக்கு, 2017ஆம் ஆண்டில் 86 புதிய ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் 133 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர்” என வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தெரிவித்தார்.
“எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியேறும் 53 பேர் மற்றும் 33 பட்டதாரிகள் என 86 பேருக்கு, புதிய ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, அதிபர்களாக தரமுயர்வு பெற்று செல்லும் 25 ஆசிரியர்கள் உட்பட 133 ஆசிரியர்கள், இடமாற்றம் பெற்றுக்செல்கின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.
கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள நான்கு கல்விக்கோட்டங்களிலும் உள்ள 112 பாடசாலைகளில், 104 பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றன.
இந்த பாடசாலைகளில் அதிகமானவை, ஆசிரியர் பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றன. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு இதுவரை ஆசிரிய நியமனங்கள் எவையும் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
தற்போது, குறித்த பாடசாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதுடன, ஆசிரியர் வெற்றிடங்களால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டில், ஓரளவு ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கெனவே, ஆசிரியர் பற்றாக்குறைகள் உள்ள நிலையில் இவ்வாறு அதிகளவானோர் இடமாற்றம் பெற்றுச் செல்வதால் மேலும் 47 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
07 Jul 2025