2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 8,841 பேர் பாதிப்பு

George   / 2016 மே 17 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 8,841 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட  60 கிராம அலுலவர் பிரிவுகளில் 2,636 குடும்பங்களைச் சேர்ந்த 8,841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரைச்சி பிரதேசத்தில் 4 நலன்புரி நிலையங்களும், கண்டாவளை பிரதேசத்தில் 6  நலன்புரி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 157 குடும்பங்களைச்  சேர்ந்த 520 பேர் வரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு வீடுகள் முற்றாகவும் 110 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, கடற்படை, இராணுவம் ஆகியோர் மக்களுக்கான சேவைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .