Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 29 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என். நிபோஜன்
கிளிநொச்சி - இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து, 10 கிளைமோர் குண்டுகள், 66 கைக்குண்டுகள், 42 மோட்டார் பியுஸ் என்பவற்றை, 57ஆம் படைப்பிரிவினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நண்பகல் சுமார் 12 மணியளவில், 57ஆம் படைப்பிரிவினர் குறித்த தேடுதலை ஆரம்பித்து, மாலை 5.30 மணியளவில் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில், வீட்டைப் பராமரிக்கும் நபர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிணறு இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, கிளைமோர் குண்டொன்று கிணற்றில் இருப்பதைக் கண்டு, கிணறு இறைக்கும் பணியைக் கைவிட்டதுடன், 57ஆம் படைப் பிரிவினரிடம் தகவல் வழங்கி உள்ளார்.
எனினும், கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பிரதேசத்தில் நிலவிய அசாதாரண வானிலையால், படையினரால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வானிலை வழமைக்கு திரும்பியுள்ள நிலையிலேயே, தமது தேடுதலை இராணுவத்தினர் முன்னெடுத்தனர்.
இதன்படி, நேற்று 12 மணியளவில் ஆரம்பித்த தேடுதல் நடவடிக்கையின் காரணமாக, 12.5 கிலோகிராம் கிளைமோர் குண்டு 01, 7.5 கிலோகிராம் கிளைமோர் குண்டுகள் 3, 2.5 கிலோகிராம் கிளைமோர் குண்டுகள் 6 உள்ளடங்கலாக 10 கிளைமோர் குண்டுகளும், 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியூஸ்களும் மீட்கப்பட்டுள்ளன.
அத்தோடு, தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி மறுக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் முடிவுற்ற பின்பு, மீட்கப்பட்ட வெடிபொருட்களைப் புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே, ஊடகவியலாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .