Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 ஜூன் 01 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என். நிபோஜன்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் புனரமைப்புக்கென, மத்திய அரசினால் இவ்வருடம் ஒதுக்கப்பட்ட 1,400 இலட்சம் ரூபாய் நிதி, திரும்பிச்செல்லும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஆயிரம் இலட்சம் ரூபாய், வைத்தியசாலையின் புனரமைக்கும் மிகுதி 400 இலட்சம் ரூபாய், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரைக்கும் குறித்த நிதியை பயன்படுத்துவதில் எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாமையினால் இவ்வருட இறுதிக்குள் குறித்த நிதி திரும்பிச்செல்லும் ஆபத்து இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனரமைப்புக்கென ஒதுக்கப்பட்ட நிதியினை, வைத்தியசாலையின் புனரமைப்புக்கு பயன்படுத்த வேண்டியே தேவை இல்லை எனவும் வைத்தியசாலையின் தற்போதைய நிலைமையின் படி, புனரமைக்கு அவ்வளவு பெரிய தொகை தேவைற்றது எனவும் அதனால், அந்த நிதியைக் கொண்டு மாவட்ட வைத்தியசாலையின் அடுத்தகட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுமாறு, வைத்தியசாலையின் ஒரு தரப்பினர் கோரிவருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், குறித்த நிதியினை வைத்தியசாலையின் புனரமைப்புக்கே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அத்தோடு, அரசியல் தலையீடுகள் காரணமாகவும் தவறான கருத்துருவாக்கம் காரணமாகவும் குறித்த நிதியை வைத்தியசாலையின் தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .