2025 ஜூலை 05, சனிக்கிழமை

கைவேலி கிராமம் கண்ணிவெடி பிரதேசமாக அடையாளம் காணப்பட்டது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராமசேவையாளர் பிரிவின் கைவேலி கிராமத்தில், அண்மையில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (07) அப்பகுதிக்குச் சென்ற அயப மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால், அப்பகுதி ஒரு கண்ணிவெடி பிரதேசமாக அடையாளம் காணப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருக்கு அறிவித்து அப்பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ளுமாறு தெரிவித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே உரிய அதிகாரிகள் இப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை முன்னெடுக்குமாறும் தங்களுக்கு ஏற்படவுள்ள இழப்பிலிருந்து தங்களை பாதுகாக்குமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .