2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கசிப்பு காய்ச்சுவர்களுக்கு பொலிஸார் துணை என்கிறார் ஸ்ரீஸ்கந்தராசா

Gavitha   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு காய்ச்சுபவர்களுக்கு பொலிஸார் துணைபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா பொலிஸார் முன்னிலையிலேயே குற்றம் சாட்டினார்.

கரைதுறைபற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை (19) நடைபெற்ற போது, அவர் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'மாவட்டத்தின் கசிப்பு காய்ச்சலை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாதா?. ஆனால், அதனை பொலிஸார் செய்யமாட்டார்கள். கசிப்பு காய்ச்சுபவர்களுடன் பொலிஸாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

கசிப்பு காய்ச்சும் இடங்களை பொலிஸார் பிடிக்கச் செல்லும் போது, அதற்கு முன்னதாகே பொலிஸ் நிலையத்திலிருந்தே, கசிப்பு காய்ச்சுபவர்களுக்கு அவர்கள் செல்லும் தகவல் செல்கின்றது.

இவ்வாறான நிலையில் மாவட்டத்தின் கசிப்பு காய்ச்சுதலை எப்படி கட்டுப்படுத்த முடியும். பொலிஸார் நினைத்தால் கசிப்பு காய்ச்சுதலை கட்டுப்படுத்த முடியும். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கசிப்பு என்ற சொல்லுக்கு இடமில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .