Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், சட்டவிரோ கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் ஈடுபட்டு நீதிமன்ற குற்றத்துக்கு உட்பட்டவர்களை அழைத்து அவர்களுக்கு மாற்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுத்தும் முயற்சியில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈடுபட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இன்று (24) சட்டவிரோத கசிப்பு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை, புதுக்குடியிருப்பு பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, ஒரு சிறப்பு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள்.
புதுக்குடியிருபு;பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி.சந்திரபால தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கசிப்பு உற்பத்தி, வியாபார நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள், தொழில் இல்லாத நிலையில் இவ்வாறான சட்டவிரோத தொழில் செய்பவர்களை (குற்றம் புரிந்தவர்களை) அழைத்து, அவர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவும் விவசாய செய்கையை மேற்கொள்ளவும், புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆவண செய்துள்ளதுடன், இனிவரும் காலங்களில் சட்டவிரோத தொழிலை எவரும் செய்யகூடாது என்றும் எடுத்துரைத்தனர்.
கடந்த ஆண்டு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோ கசிப்பு மற்றும் விற்பனை நடவடிக்கை ஊடாக 54 இலட்சத்தி 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு மூன்றாம் மாதம் வரையான காலப் பகுதியில், 50 கசிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 8 இலட்சத்தி 41ஆயிரம் ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago