2025 ஜூலை 05, சனிக்கிழமை

கடத்தப்பட்ட ஆடுகள் மீட்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியிலுள்ள வயல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது திங்கட்கிழமை (11) காணாமற்போன 14 ஆடுகளில் 13 ஆடுகள், இன்று புதன்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மில் ஒன்றின் பின்னால் இருக்கும் தொட்டிக்குள் இருந்தே மேற்படி 13 ஆடுகளும் உயிருடன் மீட்கப்பட்டதுடன், 1 ஆடு இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (11) வயல் நிலத்தில் மேயவிடப்பட்டிருந்த மேற்படி ஆடுகள் காணாமற்போயிருந்தன. இது தொடர்பில், ஆடுகளின் உரிமையாளரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.  

இந்நிலையில், ஆடுகளைத் திருடிய நபர்கள் அதனை மில்லின் தொட்டிக்குள் மறைத்து வைத்துள்ளனர். இதில் ஒரு ஆடு மூச்சுத்திணறி இறந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .