2025 ஜூலை 05, சனிக்கிழமை

கடலில் குளிக்கச்சென்ற மாணவன் பலி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 19 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு கடலில் இன்று சனிக்கிழமை காலை குளிக்கச் சென்ற பாடசாலை மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இன்னொரு மாணவன் காணாமல் போயுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூயில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். யதூசன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை வகுப்பு முடித்துக்கொண்டு ஒரே வகுப்பில் கற்கும் ஐந்து நண்பர்கள் முல்லைத்தீவு கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது உடுப்புக்குளத்தைச் சேர்ந்த மாணவனை அலை அடித்துக்கொண்டு செல்வதை அவதானித்து தனது நண்பரைக் காப்பாற்றுவதற்காக சென்ற போதே குறித்த மாணவன் இவ்வாறு நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

அத்துடன், நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை மீனவர்கள் தொடர்ந்தும் தேடும் பணியில்; ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மாணவனின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .