Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 16 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பஸ்களை கடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதை அதிகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஊளையிடுகின்றனர்' என்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறிமுறையை செயற்கையான முறையில் உருவாக்கும் வகையில், பாவனைக்கு உதவாத ரயில் பெட்டிகள், பஸ்கள், கப்பல்கள் மற்றும் கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு, சுமார் 40க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் நீண்ட காலமாகப் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.
17ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவில் இந்த முறையை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ஜப்பான் போன்ற நாடுகளில் கடந்த 150 வருடங்களாக இந்தப் பொறிமறையில் ஆர்வம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் கூறினார்.
அதைவிட, இந்தியாவின் தமிழகத்தின் பல்வேறு பகுகளிலும் கடந்த பல ஆண்டுளாக இவ்வாறான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறன்றதென்றார்.
'குறிப்பாக, 2017ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறிய கப்பல் ஒன்று எண்ணெய் ராங்கர் உடன் மோதியமையினால் ஏற்பட்ட எண்ணெய் பரவல் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன.
'இதனால் கடல் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்த விரைவாக மீள்வதற்கு செயற்கையான கடல் நீரடிப் பாறைகளை உருவாக்கும் இதே பொறிமுறைதான் முன்மொழியப்பட்டிருந்தது.
'அதுமாத்திரமன்றி, பாவனைக்கு உதவாத பஸ்களை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தை எமது அரசாங்கம் ஏற்கெனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கiயில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
'இவ்வாறான நிலையிலேயே, வடக்கு கடல் பிரதேசத்தில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல் வளம் குறைவடைந்து வருவதாகவும் கடல் நீரடிப் பாறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்கினால் தொடர்ச்சியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும் உறுதிப்படுத்தியிருந்தன.
'இந்நிலையிலேயே, தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்து, குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
'ஆனால், சிலர் சுயநலன்களுக்காவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், இந்தச் செயற்றிட்டம் தொடர்பாகவும், கடந்த காலங்களைப் போன்றே தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர்' என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago