2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கடலில் குளிக்கச் சென்ற மூவர் மாயம்: மற்றுமோர் இளைஞனின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வவுனியாவில் இருந்து வருகை தந்த இளைஞர் மூவர், முல்லை கடலில் மாயமானவ நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில்,  இரண்டாவது நபரின் சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.


நேற்று (05) மாலை, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வானில் வந்த  மூன்று  இளைஞர்  குளித்து கொண்டிருந்த போது,  திடீரென  கடலில் மாயமாகியுள்ளனர். 

 குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில், அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த  யுவதி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
 
இதையடுத்து, பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை  தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். 

மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன்  (வயது_27),  சிவலிங்கம் சகிலன் (வயது_26) , தோணிக்கல் பகுதியை சேர்ந்த  விஜயகுமாரன் தர்சன்  (வயது_26) ஆகியோரே, இவ்வாறு கடலில் மாயமாகியிருந்தனர்.

தேடுதலின் போது , நேற்று இரவு, ஒருவருடைய சடலம்  மீட்கப்பட்டு, முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன 

இந்நிலையில், மற்றுமொருவருடைய சடலம், சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X