2025 மே 03, சனிக்கிழமை

’கட்சி பேதமின்றி பணியாற்றுவேன்’

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கிடைத்திருக்கும் வாய்ப்பை சரிவரப் பயன்படுத்தி, கட்சி பேதமின்ற பணியாற்றுவேன் என்று, செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சுப்பையா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

தவிசாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டப் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துரைத்த பொதே, சுப்பையா ஜெகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கிடைத்திருக்கும் இந்தப் பதவி மூலம் கட்சிபேதமின்றி, செட்டிகுளம் பிரதேசத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சமச்சீரான முறையில் சேவையாற்றுவேனென்றார்.

இதேவேளை, சபையை நல்லமுறையில் நடத்திச் செல்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து நிற்பதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X