Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
தமிழ் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தித்தான் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - மல்லாவி மாந்தை கிழக்கு பிரதேசங்களில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்புக்கள், நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், ஒற்றுமையின்மை காரணமாக, தாங்கள் ஜக்கியப்படாததன் காரணமாக தமிழ் மக்களை தற்போதைய அரசு பிரித்து தமிழர்களின் வாக்குகளை சிதறசெய்து தமிழர்களின் அரசியல் பலத்தை அம்பாறை மாவட்டத்தில் இல்லாமல் செய்துள்ளார்களென்றார்..
“இது தொடரக்கூடாது. எதிர்காலத்தில் நாங்கள் ஒற்றுமைப்பட்டு எங்கள் அரசியல் உரிமை போராட்ட இலக்கினை எட்டுவதற்கு நாங்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். ஒற்றுமை பலத்தை அதிகரித்து செய்யவேண்டும்.
ஆனால் இந்த ஒற்றுமை தொடரவேண்டும் தேர்தலுக்காக மட்டும் தமிழ்கட்சிகள் பிரிந்து நிக்கின்றன அல்லது ஒற்றுமைப்படுகின்றன என்ற நிலை மாற்றம் பெறவேண்டும்.
தமிழ் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தித்தான் தமிழ்மக்களையும் நாங்கள் ஒற்றுமைப்படுத்த முடியும். நாங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமல் மக்களை ஒற்றாக வாருங்கள் விடுதலைநோக்கிய பயணத்தில் சேருங்கள் என்று கேட்பதற்கு தமிழ் கட்சிகளுக்கு எந்த அருகதையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago