2025 மே 02, வெள்ளிக்கிழமை

கட்டுத்துவக்குடன் 19 வயது இளைஞன் கைது

Niroshini   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

அளம்பில் - தங்கபுரம் பகுதியில், சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன், 19 வயது இளைஞன் ஒருவர், இன்று (29) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், தங்கபுரம் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே, சட்டவிரோதமாக நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இதை பயன்படுத்திய இணைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .