Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 31 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி குளத்தை சுற்றியுள்ள இடங்களில் கொட்டப்படும் கழிவுகளினால் வயல் நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அசுத்தமடையும் நிலை காணப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரத்தில் குவியும் கழிவுகளை அப்புறப்படுத்தும் கரைச்சிப் பிரதேச சபை, அவற்றை உமையாள்புரம் பகுதிக்கு அப்புறப்படுத்துகின்றது. இருந்தும் சில நேரங்களில் திருட்டுத்தனமாக கிளிநொச்சிக் குளத்தை அண்மித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
கழிவுப் பொருட்கள் மழை காலங்களில் வயல் நிலங்களுக்குச் சென்றடைவதால் விவசாய நடவடிக்கை பாதிக்கப்படுகின்றது.
உக்காத கழிவுப் பொருட்கள் வயல் நிலங்களில் நிறைவதன் காரணமாக வயல் பண்படுத்தலின்போது, விவசாயிகள் தொடர்ச்சியாக பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
குளத்துக்குள் குவிகின்ற கழிவுப் பொருட்களினால் குளம் அசுத்தமடைந்து வரும் நிலையில், குளத்துக்கு வெளியேயும் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதன் காரணமாக கிளிநொச்சி கிழக்குப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் முகம் சுழித்தபடி பயணிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
கிளிநொச்சி நகரத்தில் குவியும் கழிவுப்பொருட்களை உமையாள்புரத்துக்கு முழுமையாக கொண்டுசெல்வதற்கு பிரதேச சபையினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை; விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .