2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கணவன், மனைவியை அச்சுறுத்தி கைவரிசை

George   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

'மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள ஒட்டறுத்தான் குளம் பகுதியில் நள்ளிரவு நேரம் முகம் மூடி அணிந்து கொண்டு கூரிய ஆயுதங்களுடன் கிராம உத்தியோகத்தர் வீட்டுக்குச் சென்றுள்ள கொள்ளையர்கள், 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தையும் ஞாயிற்றுக்கிழமை (14) நள்ளிரவு கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது' என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கணவனையும் மனைவியையும் பயமுறுத்தியதுடன் கணவனை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராம உத்தியோகத்தர், பக்கத்து வீட்டில் வசித்து வரும் 70 வயதுடைய உறவினருக்கு உதவியாக இரவில் அவருடன் தங்குவது வழக்கம். வழமை போல் நள்ளிரவு 12 மணியளவில் பக்கத்திலுள்ள வயோதிபர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இவரின் வரவை எதிர்பார்த்து ஏற்கெனவே வயோதிபரின் வீட்டுக்குள் சென்று மறைந்திருந்து கொள்ளையர்கள், அவரைப் பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, கொள்ளையிட்டுள்ளனர்.

காயங்களுக்குள்ளான கிராம உத்தியோகத்தர், மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .