2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கணவன், மனைவியை மிரட்டி கொள்ளை

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முரசுமோட்டை பழையகமம் பகுதியில் உள்ள வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 1 மணியளவில் நுழைந்த  திருடர்கள், கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டிலிருந்த கணவன், மனைவி ஆகியோரை மிரட்டி உட்கார வைத்து, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

53 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 பவுண் தங்க நகை என்பன இவ்வாறு கொள்ளைடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உள்நுழைந்த திருடர்கள் மின்குமிழ்கள், தொலைபேசியை அடித்து நொருக்கியுள்ளனர். பின்னர், வீட்டிலிருந்த வயோதிப கணவன், மனைவியை மிரட்டி உட்கார வைத்து, கொள்ளையடித்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .