2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம்

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஜூன் 23 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}



கிளிநொச்சி மாவட்ட கரையோரப் பகுதிகளில், கண்டல் தாவரங்களைப் பாதுகாப்பதற்கான செயற்றிட்ட அறிமுகக் கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், நேற்று (22) இடம் பெற்றது.

இலங்கை சிறு மீனவ சம்மேளனத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான கண்டல் தாவர மர நடுகைத்திட்டம், கரையோர சமூகங்களின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைக்கும் இக்கலந்துரையாடலில் மேற்படி அமைப்பின் தலைவர் அEராத விக்கிரமசிங்க, திட்ட முகாமையாளர் ஜெயதிலக மற்றம் யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் திருமதி ஜி.ராஜினி போன்றோர் கலந்துகொண்டு திட்டம் தொடர்பான விளக்கம் அளித்தனர்.

மேலும் இத்திட்டத்தின் அறிமுக கலந்துரையாடல் அடுத்து பிரதேச மட்டத்தில் நடைபெற்று பின்னர் கிராம மட்டங்களில் அமுல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், பிரதேச செயலாளர்கள், மாவட்ட உதவி திட்ட பணிப்பாளர், மீன்பிடி உதவிப்பணிப்பாளர், வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கடற்தொழில் சங்கங்கள் என பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .