Princiya Dixci / 2021 மார்ச் 11 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - வட்டக்கச்சி வைத்தியாலையை அண்மித்த பகுதியில், நேற்று (10) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
18 வயதையும் பூர்த்தி அடையாத இருவரே, இந்தக் கத்தி குத்தை மேற்கொண்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர், அவரது வீட்டு வாசலில் வைத்து கத்தி குத்துக்கு இலக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (11) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago