2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கனகாம்பிகைக்குளத்தின் கீழ் உப உணவுச் செய்கையே மேற்கொள்ளப்பட வேண்டும்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தின் கீழ் உப உணவுப் பயிர்ச்செய்கை மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

குளத்தின் வடிகால்கள் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான பிரச்சனைகளை நீர்ப்பாசனத்திணைக்களம் தீர்த்து வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கனகாம்பிகைக் குளத்தின் கீழான நிலப்பரப்பு உபஉணவுச்செய்கைகளுக்காகவே ஒதுக்கப்பட்டது. எனினும் தற்போது குறிப்பிட்ட நிலப்பரப்பில் நெற்செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற விவசாயக்குழுக்கூட்டத்தின் போது, கனகாம்பிக்கைக்குளத்தின் கீழ் உள்ள 100 ஏக்கர் உப உணவு பயிர்ச்செய்கை நிலப்பரப்பில் நெற்செய்கைக்காக மானியப்பசளைகள் வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப்பதிலளித்த மாவட்டச் செயலர், அரசாங்கத்தின் பிரதான கொள்கையில் உப உணவுப்பயிர்செய்கைகளை ஊக்குவித்தல் மிக முக்கியமான ஒன்றாகும். கனகாம்பிகைக்குளம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி உபஉணவுப்பயிர்;ச்செய்ககைளுக்கே இந்த நிலம் பயன்படுத்தவேண்டும், இது தொடர்பில் நீர்ப்பாசனம் வடிகால்கள் தொடர்பான பிரச்சனைகளைத்தீர்ப்பதுக்கு நீரப்பாசனத்திணைக்களம் முயற்சி செய்யவேண்டுமென அவர்; தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .