2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கனரக வாகனங்களால் வீதிகள் சேதம்

Freelancer   / 2023 மார்ச் 27 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மடுக்கதை கிராமத்தில் அகழப்படும் மணல், ஸ்திரத்தன்மை அற்ற  வீதிகளூடாக கனரக  வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் வீதிகள் மற்றும் சிறிய பாலங்கள் சேதமடைந்து போக்குவரத்துக்கு உதவாவாமல் போகின்றன.

இதனால் அவ்வழியாகச் செல்லும் பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக  மடுக்கரை மற்றும் இராசமடு கிராம மக்கள்  குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன், பல வருடங்களாக அபிவிருத்தி எதுவும் காணாத குறித்த வீதி, தற்போது புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இவ்வாறு ஒரு நாளைக்கு அளவு கணக்கில்லாத வாறு கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் சென்றால் புதிய வீதி தாங்குமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

மணல் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது பிறிதொரு வீதி. ஆனால், அவர்கள் அந்த வீதி ஊடாக செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், மடுக்கரை இராசமடு வீதியை அவர்கள் சேதப்படுத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடியான நேரத்திலும் அரசு வீதிகளை அபிவிருத்தி செய்கிற்ன போதிலும் மறுபுறம் அதே அரச அதிகாரிகள் முறையற்ற அனுமதிப் பத்திரங்களால் வீதிகளை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என மக்கள் சாடுகின்றனர். 

குறித்த வீதிகளால் கனரக வாகனங்கள் மணல் ஏற்றிச் செல்வது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அதிகாரிகள், மண் மாபியாக்கள் பக்கம் சார்ந்து நின்று, தவறுகளை நியாயப் படுத்துகிறார்களே தவிர, பொதுமக்களுக்கு ஆதரவாக பேச மறுக்கிறார்கள் எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .