Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணியை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளியுங்கள் என பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரிட் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கராயன் கிராம அலுவலர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புகளின் பெண்கள் இக்கோரிக்கையை விடுத்தனர்.
கரும்புத் தோட்டக் காணியை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரதேசத்தில் காணப்படுகின்ற விவசாய வளங்களை சுயதொழில் முயற்சிகளுக்குப் பயன்படுத்தக் கூடியவகையில் ஊக்குவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.
பெண்கள் கூட்டாக இணைந்து சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு நிதி மூலகங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அக்கராயன் பிரதேசத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கான தொழில் முயற்சிகளை உருவாக்க முடியும் என, கூட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புகளின் பெண் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
13 minute ago
17 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
56 minute ago