2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

Princiya Dixci   / 2021 மார்ச் 18 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கரைச்சி பிரதேச சபையின் அயல் பணியாளர்களால், கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக, இன்று (18) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் அயல் பணியாளர்கள் 47 பேர், கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக  பந்தல் அமைத்து, இன்று காலை 6 மணி முதல், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

5 வருடங்களுக்கும் மேலாக அயல் பணியாளர்களாகக் கடமையாற்றிவரும் தமக்கு, நிரந்த நியமனம் வழங்கப்படாது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் ஊடாக புதியவர்களை இணைக்க முயற்சிப்பதாக தெரிவித்தே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் எனவும் போராட்டக்கார்ர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இவர்களுடன் இணைந்து கிளிநொச்சி நகரில் உள்ள கழிவகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும் சுகாதார சிற்றூழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கமைய, சுகாதார சிற்றூழியர்களாக பிரதேச சபையில் பணியாற்றும் இவர்கள், இன்று நகர துப்பரவாக்கல் பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. 

அத்துடன், நிரந்தர பணியாளர்கள் சிலரைக் கொண்டு நகரைத் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்க முற்பட்டபோது, வாகனங்களை மறித்து அவை வெளியே செல்லாத வகையில், பிரதான வாயிலையும் மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பதிகாரி ஜெயகாந்தன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அவர்கள் குறித்த வாகனங்களை வெளியேற விடாது, தமது போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்து, தொடர்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .