2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்

Niroshini   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

 கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வு, இன்று (09), கரைதுறைப்பற்று   பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன்  தலைமையில் நடைபெற்றது

சபையில் 24 உறுப்பினர்கள் இருக்கின்ற போது, நான்கு உறுப்பினர்கள், இன்று, சபைக்கு சமூகமளிக்காத நிலையில் 20 உறுப்பினர்கள்  சமூகமளித்தனர்

இந்நிலையில், சமூகமளித்த 20 உறுப்பினர்களின்  பூரண சம்மதத்தோடு 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக  சபையிலுள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் தலா 2.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X