2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்

Yuganthini   / 2017 ஜூன் 27 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில், நகரத் திட்டமிடலுக்கு அமைவான நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று, மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில், இன்று (27) நடைபெற்றது.

கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில், புதிய கடைத்தொகுதிகளை அமைப்பதற்கும் தீ அணைப்புப் பிரிவை நிறுவுவதற்கும், மீள்குடியேற்ற அமைச்சினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, குறித்த கடைத்தொகுதிகளை அமைப்பதற்கு, தற்போது 80 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் நவீன வசதிகளைக் கொண்ட 124 கடைகளை, வாகனத் தரிப்பிடங்கள் என்பவற்றை உள்ளடக்கிய வகையில், குறித்த சந்தைத் தொகுதியை முழுமைப்படுத்துவதற்கு 1,000 மில்லியன் ரூபாய் நிதி தேவை எனவும் இதற்கானத் திட்டங்களை, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரித்த அறிக்கையை, முன்மொழிவுகளுக்காக இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .