2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’கல்வி நிலையங்களை மூடாவிடின் சட்டம் பாயும்’

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நகரில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் பிரத்தியேக வகுப்புகளினதும், கல்வி செயற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்துமாறு, வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக, நகரத்துக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் பிரத்தியேக வகுப்புகளினதும், கல்வி செயற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்துமாறு, உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் இரகசியமான முறையில், மாணவர்களை வரவழைத்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர் எனவும், அவர் சாடினார்.

எனவே, குறித்த உத்தரவுகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும், கௌதமன் எச்சரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .