2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

களை நாசினிகள் இன்மையால் களைகள் பெருக்கெடுப்பு

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 19 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள கால போக செய்கைக்கு உரிய களை நாசினிகள் இன்மையால் 13,000 தொடக்கம்  14,000 ஏக்கர் வரையான மானாவாரி பயிர் செய்கைகளில் களைகள்  கட்டுப்படுத்தப்படாத நிலையில் காணப்படுவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தேவரதன் தெரிவித்துள்ளார் .

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு 28,000 ஹெக்டேயர்  நிலப்பரப்பில் காலப்போக  நெற்செய்கை  மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட சில பகுதிகளில் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போதிய உர வகைகள் மற்றும் களை நாசினிகள் கிடைக்காமையால் 15 சதவீத விளைச்சல் கூட கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர் 

கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் தேவரதன் தெரிவிக்கையில், 15,000 ஹெக்டேயர்  வரையான நிலப் பகுதிகளுக்கு மாத்திரம் ஏற்கெனவே விவசாயிகள் தங்களது கையிருப்பில் இருந்த மற்றும் அதிகூடிய விலைகளை யூரியா உரத்தை கொள்வனவு செய்து பயன்படுத்தியுள்ளனர் குறிப்பாக ஒரு ஹெக்டேயருக்கு 205 கிலோ கிராம் யூரியா பயன்படுத்த வேண்டிய இடத்தில் 15 கிலோ கிராம் அல்லது 20 கிலோ கிராம் வரையான அளவை மாத்திரம் பயன்படுத்தி இருக்கின்றார்கள்

விவசாயிகளுக்கு உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட திரவ உரம் மற்றும் பொட்டாசியம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ  திரவ உரம்  என்பன வழங்கப்பட்டிருக்கின்றது 

யூரிய வுக்கு பதிலாக கிடைக்கப்பெற்ற நனோ திரவ உரம்  முழுமையாகக் கிடைக்காததால் அதனை முழுமையாக வழங்க முடியாத நிலை தோன்றியுள்ளது மாவட்டத்துக்கு 24,000 லீற்றர் அளவு தேவையான போதும் 11,000லீற்றர்  மாத்திரமே கிடைக்கப் பெற்றிருந்தது . இவற்றை 8,000 ஹெக்டேயருக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது ஏனைய விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .