2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கழிவுகள் கொட்டப்படுவதால் நந்திக்கடல் மாசடைகிறது

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன் 

 

முல்லைத்தீவு - நந்திக்கடலை அண்மித்த பகுதிகளில், தொடர்ந்தும் கழிவுகள் கொட்டப்படுவதால், கடற்கரையோரம் மாசடைந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் பகுதியான நந்திகடல் பகுதி, இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் ஒரு கடற்பிரதேசமாகக் காணப்படுவதுடன், இச்சிறுகடலை நம்பி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கரையோரப் பகுதிகளில், பிற இடங்களில் இருந்து எடுத்துவரப்படும் கட்டட இடிபாட்டுக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளால், கரையோரப் பகுதிகள் மாசடைகின்றன.

இதனால், எதிர்காலத்தில் மீன் உற்பத்திகூட பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய கடற்றொழிலாளர்கள் நந்திக்கடல் பகுதிகளை எல்லையிட்டுக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .