2025 ஜூலை 16, புதன்கிழமை

கவனிப்பாரற்று இருக்கும் பண்டார வன்னியன் சிலை

George   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட பண்டார வன்னியன் சிலையின் கையும் வாளும் உடைந்த நிலையில் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு, மல்லாவி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, வன்னி மண்ணின் கடைசி மன்னன் பண்டாரவன்னியன் உருவச்சிலை, கடந்த ஜனவரி மாதம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களின் பின்னர் குறித்த உருவச்சிலையின் கை மற்றும் வாள் என்பன உடைக்கப்பட்டதுடன் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றது.

எனவே, குறித்த சிலை தொடர்பில் உரியவர்கள் கவனத்தில் எடுத்து அதனை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய் செலவில், துணுக்காய் பிரதேச செயலக ஒத்துழைப்புடன், துணுக்காய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக, திருவள்ளுவர் உருவச்சிலையும், மல்லாவி நகரப் பகுதியில் பண்டார வன்னியன் உருவச் சிலையும், அமைக்கும் பணிகளை், அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம அமைப்புக்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், இச்சிலை அமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் சிலராலும் மற்றும் வடக்கு மாகாண சபையின் அமர்வின் போதும் சுட்டிக் கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X