2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் தொடர்  நில மீட்பு போராட்டம் ஆரம்பிக்கபட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், கேப்பாப்புலவு மக்களால், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு முன்னால், இன்றைய தினம் (01) கவனயீர்ப்புப் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன், பிரதேச சபை உறுப்பினர்களான லோகேஸ்வரன், குகனேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டக் களத்தில், பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .