2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

காணாமற் போன மீனவர்கள் சடலமாக மீட்பு

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் , எஸ்.நிதர்ஷன்

தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குச்  சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  இரு மீனவர்கள்  5 நாட்களின் பின்னர், இன்று (13) பிற்பகல் யாழ்., புங்குடுத்தீவு கடற்கரையில் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக் கிழமை (08)ஆம் திகதி, தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த, சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இருவரும் கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக  படகு ஒன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

கடலுக்குச் சென்ற குறித்த இரு மீவர்களும், குறித்த நேரத்துக்கு கரை திரும்பாததால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் பத்து படகுகளில் 40 மீனவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனாலும் குறித்த மீனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையிலேயே, இன்று  (13) மதியம் சடலங்களாக  கரை ஒதுங்கியுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X