2025 மே 03, சனிக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ’பின்னணியில் கூட்டமைப்பே உள்ளது’

Niroshini   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் சென்ற சுமந்திரனுக்கு, நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாதென, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்தார்.

அத்தடன், நூற்று கணக்கான உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கும்  இறந்து போனதற்குமான பின்னணியில் கூட்டமைப்பே உள்ளதெனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சர்வதேச நீதி கோருதல் விடயத்தில், அரசாங்கத்தின் முகவர்களாக செயற்படும் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாதென்றார்.

வரும் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்துக்கும் தாங்கள் சம்மதிக்க போவதில்லையெனத் தெரிவித்த அவர், அவ்வாறு கூட்டமைப்பு ஜெனிவாக்கு முண்டி அடித்துக்கொண்டு செல்வதாக இருந்தால், தாம் கடும் நடவடிக்கையை சர்வதேச அளவில் எடுப்போமெனவும் கூறினார்.

அத்துடன், ஐ.நா  மனித உரிமை பேரவையில் எந்தவொரு தரப்பாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவரங்களை முன்வைப்பதாக இருந்தால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பை தொடர்புகொண்டு, அவர்களின் நிலைப்பாட்டை கேட்டறிந்து தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும், திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X