2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காணாமல் போன வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில், இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிபப் பெண் காணாமல் போன நிலையில், சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர், நேற்று (27) கைது செய்யப்பட்டு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை, சடலம் இருக்கும் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு, சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கந்தபுரம் - பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில், குறித்த வயோதிபப் பெண்ணின் சடலம் வீசப்பட்டுள்ளது.

இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து, சடலத்தை வீசியுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .