Niroshini / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமுக்கு காணி சுவீகரிப்பதற்காக முன்னெக்கப்படவிருந்த அளவீட்டு பணி நடவடிக்கை, மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமுக்கு காணி சுவீகரிப்பதற்காக, இன்று (16) அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தன.
இந்நிலையில், அங்கு கூடிய பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அத்துடன், காணி உரிமையாளர்கள் பிரதேச செயலகத்தால் அழைக்கப்பட்ட போதும், அவர்கள் சமூகமளிக்கவில்லை.
உரிமையாளர்கள் சமூகமளிக்காமை காரணமாகவும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பு காரணமாகவும் காணி அளவீட்டு பணி கைவிடப்பட்டது.
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago