2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

சண்முகம் தவசீலன்   / 2019 ஜனவரி 02 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த 8 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இன்று (02) துணுக்காய் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது

குறித்த துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டமானது 2012 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் காணிகள் வழங்கப்பட்டு 50 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மாற்றுவலுவுள்ளோர் அடங்கலாக 50 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்

இருப்பினும் அவர்களது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் ஆரம்பம் முதல்  நிரந்தரமாக வசித்துவரும் 8 குடும்பங்களுக்கு இன்று காணி உறுதிப்பத்திரங்களை துணுக்காய் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி வழங்கிவைத்தார். அங்கு வசித்துவரும்  ஏனையவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .