2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காணி வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூன் 16 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் போலி ஆவணங்களின் ஊடாக காணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதனால், காணி கொள்வனவாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இவ்வாறு விற்கப்படும் காணிகளில் பல புலம்பெயர் நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக துப்பரவு செய்யப்படாமல் காணப்படும் காணிகள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் தங்களது காணிகள் தொடர்பான ஆவணங்களை  மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகத்தில் உள்ள காணிக் கிளைகளில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணிகளை கொள்வனவு செய்பவர்கள், குறித்த காணிக்கான ஆவணங்களின் பிரதிகளை காணி விற்பனையாளரிடம் பெற்று அதனை மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக காணிக்கிளைகளில் கொடுத்து, அது தொடர்பான உண்மையான உரிமையாளர் மற்றும் காணியின் தன்மை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே கொள்வனவு செய்யவேண்டும எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் பலரும் விவசாயம் தொடர்பில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நிலையிலேயே சில மோசடிக்காரர்கள் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் உள்ளாநட்டில் காணிகளை பராமரிப்பதற்கு போதிய வசதியில்லாதவர்களின் காணிகளை அடையாளம் கண்டு போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .