Niroshini / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு திருத்தலத்துக்குரிய கோயில்மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து, பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து, மன்னார் - பஜார் பகுதியில், இன்று (18), அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
நீண்ட காலமாக, மடு திருத்தலத்துக்குச் சொந்தமாக காணப்பட்ட குறித்த காணியை, சிலரின் தூண்டுதலுக்கு அமைவாக அபகரிக்கப்பட்டு வருவதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பஜார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாகச் சென்று, மன்னார் மாவட்டச் செயலாளரை சந்தித்து, மகஜர் கையளித்தனர்.

14 minute ago
37 minute ago
42 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago
42 minute ago
52 minute ago