2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்’

Yuganthini   / 2017 ஜூன் 25 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

“முள்ளிவாய்க்கால் - வட்டுவாகல் பகுதியில், இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு வெளியேற வேண்டும்” என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு - கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ், காணி சுவீகரிப்பது தொடர்பில் ஆட்சேபனை இருப்பின், பதில் அனுப்பும் படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த கடிதத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்ககால் – வட்டுவாகலில், பொதுமக்களின் 417 ஏக்கர் காணிகளை 2009ஆம் ஆண்டு தொடக்கம் கடற்படையினர் சுவீகரித்து வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், வாழவ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், காணிகள் தொடர்பில் சகல தரப்பினரையும் சந்தித்து பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த காணி சுவீகரிப்பு தொடர்பில், மூன்று தடவைகள் தம்மிடம் கோரப்பட்டதாகவும் தாம் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது வாழ்வாதாரத்துக்கான குறித்த நிலங்களை, தம்மிடம் கையளித்துவிட்டு, இராணுவத்தினர் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .